திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
🎓IRS BREAKING NEWS 🎓
26 12 2021
*🚨திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!🚨*
அம்பாறை - திருக்கோவில் காவல் நிலையத்தில், காவல்துறை உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காவல்துறையினரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
குறித்த சம்பவத்தில், காயமடைந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப்பெற்றுவருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment