வாட்ஸ் ஆப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்

 வாட்ஸ் ஆப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்


மெடா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பானது (WhatsApp) தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் குழுக்களில் எட்மின் (admin) ஆக உள்ளவர் குழுக்களிற்கு வரும் செய்திகளை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.


குழுக்களில் இருந்து யார் குறித்த செய்தியை அனுப்பி இருப்பினும் அதனை எட்மின் எனும் குழு நிர்வாகி செய்திகளை அழிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்கும் வண்ணம் இந்த அம்சம் அமையவுள்ளது.


எட்மின் செய்தியை அழித்தவுடன் (This was removed by an admin) என குறித்த செய்தி காண்பிக்கப்படும்.


வாட்ஸ் ஆப் குழுமங்களில் ஏற்படக் கூடிய அநாவசியமான அசௌகரியங்களைக் குறைக்கும் பொருட்டு குறித்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வாட்ஸ் ஆப்பின் இற்றைப்படுத்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் பல புதிய அம்சங்களிற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில் அவற்றை நிறுவுவதற்கான திகதி அறிவிக்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.





Comments