சமூக சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் றிஷான் ஜெமீல் மற்றும் அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தெரிவித்தார்.
கல்முனை டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையினால் ரூபா இரண்டரை இலட்சம் பெறுமதியான CCTV கெமராக்கள், DVR , LCD TV போன்ற சாதனங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் சில தினங்களுக்கு முன்னர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன. இந்நிகழ்வின் பேசிய அதிபர், அவ்வைத்தியசாலையின் சிறப்பான சேவைக்கு நன்றி தெரிவித்து, பாராட்டிப் பேசினார்.
இந்த சாதனங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வில், பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர், பிரதி அதிபர்களான எம்.எம்.நிஸார்தீன், எம்.எச்.எம். அபூபக்கர், உதவி அதிபர் அமீன், ஆசிரியர் சங்க செயலாளர் இஸட்.ஏ. ஜின்னா, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் வைத்திய கலாநிதி சனூஸ் காரியப்பர், வலயக் கல்விப் பணிப்பாளர் சார்பாக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஏ. மலீக், ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே குறித்த வைத்தியசாலையினால் உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு போட்டோ கொப்பி இயந்திரம் அண்மையில் வழங்கப்பட்டதோடு, பாடசாலையிலுள்ள கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாமென்றும் நடத்தப்பட்டது.
கல்லூரியின் பழைய மாணவரும், ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளருமான டொக்டர் றிஷான் ஜெமீலின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Thanks for this news
ReplyDelete