WhatsApp பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை 2021/09/19

 இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



 


 

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும் அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்புச்செய்ய வேண்டுமெனவும் கோரி WhatsApp ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



Comments